நல்வரவு

2020ல் -வேடசந்தூர் கல்வியில் உயர்வதற்கு ஏழ்மை ஒரு தடையே இல்லை அதற்கு நாங்கள் இருக்கிறோம் . நமது லட்சியம் கல்வியில் முழு வளர்ச்சி….

நமது கொள்கைகள்:

1. மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது நல்ல எண்ணங்களை வளர்ப்பது . தாழ்வு மனப்பான்மையை அகற்றுவது.

2. 10, 11, 12 படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஒருமுறை திறனாய்வு மற்றும் உயர்கல்விக்கான வழிகள் (IIT, NIT, IISC)கண்பிப்பது, அதற்கான பயிற்சிகளை வழங்குவது.

3. கல்லூரி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த மாணவர்களுக்கு அரசு வேலைகளை (UPSC, TNPSC, ISRO, DRDO)பற்றிய விழிப்புணர்வு  மற்றும் அதற்கான வகுப்புகளை வழிநடத்துவது.

4. இவை அனைத்தும் மாணவர்களுக்கு இலவசமாய் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.

5. மாணவர்களும் கல்வி வளர்ச்சியில் ஆர்வம் உள்ளவர்களும் இந்த முயற்சிக்கு அதரவு அளித்து நமது மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக மாற்ற உதவ முன் வர வேண்டும்.

6. பொருளாதாரமே இளைஞர்களின் உணர்வுகளை சிதைக்கும் முக்கிய காரணமாக இருந்து வருகிறது . வாழ்கையில் பெரும் பகுதியை மாணவர்கள் பொருளதரதிற்கான போராட்டத்திலேயே செலவிடுகின்றனர். அதுவே அவர்களுக்கு பேரளவு சுமைகளையும் இயந்திரதன்மையான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கிறது. இந்த சூழலில் இளைஞர்கள் தங்களது வருங்கால சந்ததிகளுக்கு மதிப்பையும், பெருமையும் ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் நாட்டின் உயர் பதவிகளுக்கு செல்லும் எண்ணம் குறைந்து வருகிறது.

கடுமையாக படித்து உயர் பதவிகளை அடைய வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட மாணவர்களுக்கு சாதி,சமய பாகுபாடின்றி வழிகாட்டவும்,தேவையான உதவிகளை முற்றிலும் இலவசமாக செய்து தர நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இத்தகைய பயிற்சியின் மூலம் எதிர்கால நிர்வாக சீர்கேடுகளை களைந்து இந்திய மக்களின் உணர்சிகளுக்கு மதிப்பளித்து மக்கள் நலனை சீர்தூக்கி, நாட்டின் வறுமையையும், அறியாமையையும் போக்க அதிகார மையத்திற்கு மாணவர்கள் வர வேண்டும்.

பெரும் மாணவர்கள் லஞ்ச லாவகமற்ற, ஊழலற்ற நிர்வாகத்தினை வலுவுடையதாக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.

ஒரு கை தட்டினால் ஓசை வராது அதேபோல் நாம் அனைவரும் சேர்ந்து பாடுபட்டால்தான் முன்னேற முடியும்.

எந்த பாகுபாடுமின்றி இலவச பயிற்சி அளிக்கப்படும்.